ஒலுவில் துறைமுக மண்ணை அகற்றுவதாக விஜித் விஜயமுனி உறுதி

ஒலுவில் மீன்பிடித் துறைமுக நுழைவாயில் பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ரெஜர் கப்பல் மூலம், துறைமுக நுழைவாயில் பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் இயந்திர படகுகள் செல்லும் கடற்பகுதியில், மண் நிரம்பியுள்ளதால், அந்தப் பகுதி மீனவர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Post