குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கோட்டா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயா மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

த நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post