முல்லைத்தீவில் ஆடையின்றி தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்

வீதியோரத்தில் ஆடைகள் இல்லாது நின்ற இருவர், வீதியில் பெண் ஒருவர் வருவதைக் கண்டதும் தலை தெறிக்கத் தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் வவுனியா வடக்கு, புளியங்கும் முல்லைத்தீவு பிரதான வீதியில் சன்னாசிப்பரந்தனுக்கு முன்பாகவுள்ள காட்டுப் பகுதியில் நடந்துள்ளது.

அந்த வீதி வழியாகப் பெண் ஒருவர் சிறுவன் ஒருவருடன் புளியங்குளம் நோக்கிச் சென்றுள்ளார்.

ஆள்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இரு இளைஞர்கள் ஆடைகள் அற்ற நிலையில் வீதியில் நின்றுள்ளனர்.

அதைக் கண்ட பெண் சற்றுத் தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அந்தச் சமயம் வீதியால் வேறு சிலரும் வந்துள்ளனர். அதைக் கண்ட இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடியுள்ளனர்.

காட்டுப் பகுதியில் தேடியபோதும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு 18 அல்லது 17 வயதுகள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சென்ற பாதையால் சென்று பார்த்தபோது பெண் ஒருவரின் உள்ளாடைகளும் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Post