அரசியல் கைதிகள் விடயம்-கூட்டமைப்பினரிடம் விக்கி தலைமையிலான சிவில் அமைப்புகள் அவசர கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கான சந்தர்ப்பத்தை தமிழ் தரப்பு பிரதிநிதிகள் பயன்படுத்தி அரசுடன் பேரம் பேசவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் தலைமையில் வடமாகாண சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்

அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதுடன், சிலரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளதை தொடர்ந்து, வடபகுதி சிவில் அமைப்புக்கள் இன்று (12) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அந்த சந்திப்பின் போது சகல தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் நாட்களில் வரவு செலவு திட்டம் விவாதிகக்பபடவுள்ளதால்;, சிவில் அமைப்புக்கள் தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

வரவு செலவு திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி வாக்களிக்காது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவதுடன், தவறினால் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

அதேநேரம், சிவில் அமைப்புக்கள் தாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதனால், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளதுடன், இக்குழுவினர் நாளை சனிக்கிழமை (13) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதமிருக்கும் கைதிகளிடம் உண்ணாவிரதத்தை கைவிடு வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாகவும் இன்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

மேலும் 20 செய்திகள் கீழே