மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
Spread the love

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .

வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .

வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று

இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .


எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .

மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .

இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .

கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .

இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .

இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .

இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .

இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .

இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .


இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .

எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .

மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .

ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .

இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .

தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?

இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .

Author: நலன் விரும்பி

Leave a Reply