தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!photo

SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஈழத்தில் தொடரும் தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் பார்சிலோனா மாநகரசபை தனது வருடாந்த கூட்டத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!
தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!
தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!
தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!
தமிழின அழிப்பிற்கு எதிராக பார்சிலோனா மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!

தமிழர் இயக்கம் கடந்த இரு வருட காலமாக தொடர்ச்சியாக எடுத்த முயற்சியின் விளைவாக இந்த உயர் நிறுவன ரீதியான தீர்மானத்தை பார்சிலோனா மாநகரசபை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது.

MT4 Platforms

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு தாம் இத்தீர்மானத்தை அறிவிப்பதாக பார்சிலோனா மாநகரசபை தெரிவித்துள்ளது.

தீர்மானத்தின் நோக்கம்:

தமிழர்கள் பாரம்பரியமாக 25 நூற்றாண்டுகளிற்கு மேல் இலங்கைத் தீவில் வாழ்ந்து வருகின்ற போதிலும் சிறீலங்கா அரசாங்கத்தால் அவர்களின் சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து 1948 இல் சிங்கள காலனித்துவத்திற்குட்படுத்தப்பட்டனர். இச்சிங்கள காலணித்துவ ஆட்சியில் தமிழர்கள் மீது இன்றுவரை பல அடக்குமுறைச்சட்டங்கள் திணிக்கப்பட்டு அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இதன் எதிரொலியாகவே 1960ம் ஆண்டுகளிலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக போராட ஆரம்பித்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ,1972 இல் தமிழர்களின் இந்நியாயமான போராட்டத்தை ஒடுக்கி அவர்களை இனவழிப்புச் செய்யும் நோக்குடன் குடியரசுச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இச்சர்வாதிகாரப் போக்கே தமிழர்களை ஆயுத வழியில் போராடத் தூண்டியது.

இவ்வாறாக தமிழின அழிப்பின் வரலாற்றை இன்றைய நாள் வரைக்கும் ஆய்வு ரீதியாக ஆதாரங்களுடன் வலியுறுத்தி நிற்கின்றது. இத்தீர்மானமானது, சிறீலங்கா அரசினால் ஈழத்தமிழர்களிற்கு நியாயமான தீர்வுகள் எதுவும் வழங்கப்படமாட்டாதென்பதை வலியுறுத்தி காட்டுகின்றது. ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கான நீதி விசாரணையை அனைத்துலக நீதீமன்றம் பொறுப்பேற்று ஈழத்தமிழர்களிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வலியுறுத்துவதுடன், இவ்விடயங்கள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள விசேட பிரதிநிதி ஒருவரை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கவேண்டும் என்பதையும் வேண்டியுள்ளது.

தீர்மானங்கள்:

சர்வதேச சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் சிறீலங்காவில் சமாதானத்தை மீட்டெடுத்தல்.

சிறீலங்காவில் அரசியல் மற்றும் போர்க்கைதிகள் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.
சிறீலங்கா அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் சிறீலங்கா இராணுவத்தின் 36 வருட ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
தமிழ் மக்களின் சுதந்திரமான, இறையாண்மை மற்றும் சாத்தியமான அரசை அனுபவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான தீர்வு தமிழீழம் ஆகும்.
ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அவர்களின் பூர்வீக தாயகத்திற்கு செல்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்.
சர்வதேச உத்தரவாதங்களுடன் இருதரப்பு ஒப்பந்தம் மூலம் தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.
தமிழ்ப் பிரதேசங்களில் பயங்கரவாதத்தை நிலை நாட்டும் சிறீலங்கா அரசாங்கம், சிறீலங்கா இராணுவம் மற்றும் தமிழ் மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அரச ஒட்டுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக, இத்தீர்மானம்சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் சபையிடம் வலியுறுத்தியுள்ளது.
இனவழிப்பு , சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் 2002 யூலை தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் அலுவலகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா. வின் விசேட தூதுவர் ஒருவரை பிரத்தியேகமாக நியமிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் ஆணையாளருக்கும் இத்தீர்மானம் வேண்டுகோள் விடுக்கிறது.

இத்தீர்மானத்தின் விளைவாக ஐரோப்பாவின் ஏனைய பல நகரசபைகள் தமிழர் இயக்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளது. தமிழீழ வடமாகாண சபை, தமிழ் நாடு சட்டமன்றம் போன்றவற்றைத் தொடர்ந்து மிகவும் வலுவான தீர்மானமாக வெளிவந்திருக்கும் இத் தீர்மானமானது ஈழத்தமிழர்களின் தொடரும் தமிழினவழிப்பிற்கு எதிரான நீதிக்கான மற்றும் இறையாண்மைக்கான பயணத்திலும் ஓர் பாரிய முன்நகர்வாகும்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பார்சிலோனா மாநகரசபையின் அழைப்பை ஏற்று தமிழர் இயக்கத்தின் வெளிவிகார குழு உத்தியோகபூர்வ பயணத்தினை அங்கு மேற்கொள்ள இருப்பதினால் அவர்களிற்கான உங்கள் வாழ்த்துச்செய்திகளை நாம் எடுத்துச்செல்ல தயாராக

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.