அச்சுவேலியிலிருந்தும் மனித எச்சங்கள் கண்டெடுப்பு – விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பமொன்றை நடுவதற்காக நிலத்தை நேற்று தோண்டிய சந்தர்ப்பத்திலேயே இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி – பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்களினால் இந்த குழி தோண்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது, குறித்த குழியிலிருந்து மண்டையோடு, கை, கால் என பல மனித எச்சங்கள் காணப்பட்டதை அடுத்து, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 20 செய்திகள் கீழே