அரசியலமைப்பு சபை கூடுகின்றது – சம்பந்தனின் பிரதிநிதியாக சமல் ராஜபக்ஸ

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மூவரை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது.

நாடாளுமன்ற தொகுதியில் இன்று நண்பகல் 12 மணியளவில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை புதிய பிரதம நீதியரைத் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடவுள்ளது.

10 அங்கத்தவர்களைக் கொண்ட அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் தலதா அதுகோரளவும், எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸவும் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சிறிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலைமையின் கீழ் புதிதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக பரிந்துரைக்கப்பட்ட கலாநிதி ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசுப் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன் ஆகியோரை நியமிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்த்த்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவையின் ஆயுட்காலம் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 செய்திகள் கீழே