ஆசிரியரான தந்தை தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம்

ஆந்திரப்பிரதேசத்தில் தனது 4 வயது மகளை கற்பழித்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் ஆசிரியரான தந்தை தனது 4 வயது மகளை சீரழித்த கொடூரம்
ஐதராபாத் :

ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் மணி குமார், இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு திருமணமான இவருக்கு 4-வயதில் மகள் உள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணி குமாரும் அவரது மனைவியும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

மகள் தாயுடன் வசித்து வரும் நிலையில் நேற்று மணி குமார் தனது மகளை சந்திக்க மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். அதன் பின் பள்ளிக்கு செல்லும் வழியில் மணி குமார் செய்த செயலை சிறுமி கூறியதும் தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாய் மணி குமார் மீது போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆசிரியரான தந்தையே தனது மகளை சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 20 செய்திகள் கீழே