காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

காதல் தோல்வி என்றும் முகநூலில் அவருடைய படத்தை தகாத முறையில் பதிவேற்றம் செய்ததன் காரணமாகவும் தற்கொலை செய்திருக்கலாம் என அங்குள்ளவர்கள் கருத்துக்கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தை சேர்ந்த அருளானந்தம் சாலினி என்கின்ற 18 வயது இளம்பெண்ணே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்றிரவு 11மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உடனே களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மன விரக்தியால் தற்கொலை செய்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான தற்கொலைகள் தமிழ் சமூகத்தினரிடம் அதிகரித்துள்ளதென்பது குறிப்பிடதக்கது.
பெண்களுக்கு ஆசை வார்தைகள் கூறி ஏமாற்றுகின்ற சிலகாமுகர்களின் அடாவடித்தனம் இம்மரணத்தின் காரணமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 20 செய்திகள் கீழே