இலங்கையில் 10 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த 10 பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

தங்காலை – அங்குனுகொலபெலஸ்ஸ – திக்வெவ – ரதன்பல பகுதியிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், 1998ஆம் ஆண்டு கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தங்காலை மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 20 செய்திகள் கீழே