அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் பிணை மீளாய்வு மனு நிராகரிப்பு

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரால் தாக்கல்செய்யப்பட்ட பிணை மீளாய்வு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று (11) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்தப் பிணை மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 20 செய்திகள் கீழே