ஓட்டோ பயண கட்டணம் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, ஓட்டோ பயண கட்டணம் 10 ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ சாரதிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் பின்னரே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண சீர்திருத்தத்துக்கு அமைவாக, முதலாவது கிலோமீற்றருக்காக தற்போது அறவிடப்படும் 60 ரூபாய் என்ற கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவது கிலோமீற்றருக்காக அறவிடப்படும் 40 ரூபாய் என்ற கட்டணம் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 50 ரூபாயாக அறவிடப்படவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Post