துமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதி – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை ஒருமித்த நிலையில் உறுதி செய்த உயர்நீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினாலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருந்தது.

துமிந்த சில்வா உள்ளிட்ட சாட்சியாளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Related Post