பாதுகாப்பு படை என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

மேலும் 20 செய்திகள் கீழே