இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்

உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட், கேரட்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று இது இரண்டையும் வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 3

கேரட் – 3
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
தேன் – சுவைக்கு

செய்முறை :

கேரட், பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

கேரட், பீட்ரூட், இஞ்சி, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

பின்பு அரைத்ததை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருகவும்.

சத்தான பீட்ரூட் – கேரட் ஜூஸ் ரெடி

Related Post