புதிய தொழிலில் ஈடுபடும் அமலாபால்

நடிகை அமலாபால் ‘அதோ அந்த பறவை போல’ என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் அவர், அடுத்து சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

ஊட்டச்சத்து தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களை அதிக அளவில் பணிகளில் ஈடுபடுத்த உள்ளார்.

சமீபத்தில் கேரள வெள்ளத்தின் போது நேரடியாக சென்று களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்ட அமலாபால் அடுத்து பெண்கள் சுயமுன்னேற்றத்தை கையில் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

மேலும் 20 செய்திகள் கீழே