106 வயது முதியவர் பெரிய பளையில் இனங்காணப்பட்டுள்ளார் – வியப்பில் தமிழர்கள் – படங்கள் உள்ளே

இலங்கை வடக்கு பகுதியில் போர் உச்சம் பெற்ற முகமாலை முன்னரங்க காவல் நிலைகளை அடுத்து அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி ,பெரிய பளை பகுதியில்
106 வயது வரை உடல் ஆரோக்கியத்துடன் வசித்து வரும் ஆறுமுகம் என்ற தமிழ் முதியவர் இனம் காண பட்டுளளார் . இவர் இந்த அதி உயர் வயது தாண்டி வரலாற்று சாதனை படைத்தது நிமிர்ந்து நிற்கின்றார் ,
இவரை போலவே இவரது மனைவியான தெய்வானைக்கு 96 வயதாகிறது .

இந்த தம்பதிகள் தமது சுய தேவை ,கடமைகள் அனைத்தையும் எவரது உதவியும் இன்றி
தாமே செய்து வருவதே அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி பெரியவரை பளை சிறி சக்தி கலாலயத்தினர் ,பெரியபளை வாழ் மக்களும் இணைந்து இவர்களை வாழ்நாள் சாதனையாளராக பாராட்டி கௌரவ
படுத்தியுள்ளனர் .மேலும் இரட்டை கேணி அம்மன் ஆலயத்தின் ஆரம்ப காலம் தொட்டு நீண்ட காலம் வரையில் பத்தாம் திருவிழா உபாயகாரருமாகிய
திரு திருமதி ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளை ,குறித்த ஆலயம் ,மற்றும் பாடசாலை நிர்வாகம் ,பிரதேச சபை ,பெரியபளை கிராம அபிவிருத்தி சங்கம் ,சன சமூக நிலையம் ,மாதர் சங்கம் ,உள்ளிட்டவர்கள் கண்டு கொள்ளவில்லை .
இவர்களை சிறிசக்தி கலாலயத்தினர் இனம் கண்டுகௌரவிக்க முற்பட்ட போது அனுமதி மறுக்க பட்டு தடை செய்ய பட்டுள்ள துன்பியல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது .

மேற்படி வயதான தம்பதிகளை ஆவலுடன் கண்டு கழிக்க மக்கள் முண்டியடித்த வண்ணம் உள்ளனர் .
தமிழீழ மண்ணில் அதிக வயதான தமிழ் குடிகள் இவர்களாக வரலாற்று சாதனை படைத்தது நிமிர்ந்து நிற்கின்றனர் .
இவ்வாறானவர்கள் எமது நாட்டின் பொக்கிஷங்கள் ..இவர்களை போன்றோர்களை இனம்கண்டு சகல மரியாதையுடன் பேணிப்பாதுகாப்பது தமிழர்களாகிய எமது தலையாய கடமையாகும் ..

இந்த உயர்ந்த தம்பதிகள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து உலக சாதனை படைக்க வேண்டும் என்பது உலக தமிழர்களின் பேராவலாக உள்ளது .
எதிரி இணையமும் பல்லாண்டு காலம் தம்பதி சமேதரராய் வாழ்க என இவர்களை வாழ்த்துகின்றது.

தகவல் பளை சிறிசக்தி கலாலயத்தினர் –