சாய்ந்தமருது லீடர் அஷ்ரபின்

வித்தியாரம்ப விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2019ஆம் கல்வி ஆண்டுக்காக தரம் 1 புதிய மாணவர்களை சம்பிரதாயபூர்வமாக வரவேற்கும் தேசிய நிகழ்வு சகல பாடசாலைகளிலும் நடைபெற வேண்டும் என்ற கல்வி அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்திலும் வித்தியாரம்ப விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சாய்ந்தமருது லீடர் அஷ்ரபின்வித்தியாரம்ப விழா
சாய்ந்தமருது லீடர் அஷ்ரபின்வித்தியாரம்ப விழா
சாய்ந்தமருது லீடர் அஷ்ரபின்வித்தியாரம்ப விழா
சாய்ந்தமருது லீடர் அஷ்ரபின்வித்தியாரம்ப விழா

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாக கல்முனைத் தொகுதி ஐ.தே.க. வின் அமைப்பாளரும், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ். அப்துர் ரஸ்ஸாக், கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும், பாடசாலையின் வலயக் கல்வி அலுவலக பிரதிநிதியுமாகிய என்.எம். அப்துல் மலீக் மற்றும் புதிய மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தரம்1 புதிய மாணவர்களை 2ஆந் தர மாணவர்கள் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் இன்முகத்துடன் வரவேற்றனர். பின்னர் அம்மாணவர்களின் ‘மகிழ்ச்சிகரமான ஆரம்பம்’ எனும் செயற்பாட்டின் பேறான மாணவர்களின் சுய ஆக்கப் பொருட்களையும் அதிதிகளும் பெற்றோர்களும் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் அதிதிகளால் இந்நிகழ்வினது ஞாபகார்த்தமாக பழமரக் கன்றுகள் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டு பின்னர் பிரதம அதிதியினால் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

MT4 Platforms

Related Post