ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் கற்பழிப்பு – அதிர்ச்சியில் கிராமம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகள் மூவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் எனற குற்றச்சாட்டின் கீழ், 48 வயதான குடும்பஸ்தரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவருக்கு, பெண் பிள்ளைகள் ஐவர், உள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் மொனராகலை எத்திமலை எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரும் அதே இடத்தைச் சேர்ந்தவராவார்.

அச்சிறுமிகளில், மூத்த சிறுமியை சந்தேகநபர், 2012ஆம் ஆண்டு துஷ்பிர​யோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அப்போது அச்சிறுமிக்கு 10 வயதாகும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறுமிகளை முறையே, 14 மற்றும் 09 வயதுகளில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேகநபரான 48 வயதான நபர், அந்த மூன்று சிறுமிகளையும், பல்வேறான சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோருடன், சந்தேகநபர் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டதுடன், அந்த பெற்றோரினால் முன்னெடுக்கப்படும் விவசாயத்துக்கு தொடர்ச்சியாக உதவியளித்தே, மேற்படி துஷ்பிரயோகங்களை புரிந்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

எனினும், தன்னுடைய மகள்மார் மூவரும் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில், அவர்களின் பெற்றோர், எதுவுமே தெரியாமல் இருந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள், எத்திமலை பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டா நீதவான், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மூவரை, வைத்தியசாலையில் அனுமதித்து, வைத்திய பரிசோதனை அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் கீழே