அமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்

டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 22 வயது அன் மோல்சிங் கர்பந்தா என்ற என்ஜினீயர் தங்கி இருந்தார்.

இந்தியரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

டெல்லி ஓட்டலில் அவர் தங்கி இருந்த அறையின் அருகே அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் தங்கி இருந்தார். சில நாட்களுக்கு முன் என்ஜினீயர் கர்பந்தா அமெரிக்கப் பெண்ணுடன் பேச்சுக் கொடுத்து நட்புடன் பழகினார்.

பின்னர் அவரது அறைக்கு சென்று மது குடித்ததுடன் அமெரிக்க பெண்ணையும் மது குடிக்கச் சொன்னார். சிகரெட்டும் பற்ற வைத்து இருவரும் குடித்தனர். அமெரிக்காவில் மது சிகரெட் சகஜம் என்பதால் அந்தப் பெண்ணும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் திடீர் என்று இளைஞர் அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இளைஞரை வெளியே தள்ளிவிட்டு கதவை மூடிக்கொண்டார். இரவு முழுவதும் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். மறுநாள் வேலை வி‌ஷயமாக ஜெய்ப்பூர் சென்று டெல்லி திரும்பிய பின்பு நடந்த சம்பவம் குறித்து டெல்லி சாணக்கியபுரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் கர்பந்தாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Post