6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்

Spread the love

6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்

நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்
கண் பரிசோதனை


நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறு சுறுப்புடன் இருப்பர்.

எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்ல மாட்டார்கள். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

நீரழிவு நோயும் பாதிப்பும்

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பின் எந்த பிரச்சினையும் இல்லை. வருமுன் காப்பது சிறந்தது. சர்க்கரை அளவு அன்கண்ட்ரோல் நிலையில் பொதுவாக 5 வருடங்களுக்கு

மேல் இருப்பின் ரெடினாவில் அசாதாரண நிலை ஏற்படுகிறது. அதாவது சாதாரண ரத்த நாளங்கள் அடைபடுதல் அல்லது புது ரத்த நாளங்கள் உருவாகுதல், ரத்த

நாளங்கள் உடைபட்டு ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ரத்தகசிவு ஏற்படின் திடீரென்று பார்வை இழப்பு ஏற்படும். இந்த பாதிப்புகள் அனைத்தும்

கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்து வது கடினம். அதுவும் டயாபடிஸ் கண்ட்ரோலில் எப்பொழுதும் இருந்தால் மட்டுமே. தேவைப்படின் மருத்துவர் லேசர் பயன்படுத்த

நேரிடும். எனவே டயாபடிஸ் உள்ள ஒவ்வொரு வரும் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கண்களை

பரிசோதித்தல் வேண்டும். மேலும் கண்களில் பூச்சி பறப்பது போன்று தென்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்

கண்புரையும் பார்வையும்

லென்ஸ் ஆனது ஒரு சில காரணங்களால் ஒளி ஊடு ருவும் தன்மையை இழந்து விடுகிறது. இதைத்தான் நாம் கண்புரை (Cataract) என் கிறோம். கண்புரை இருப்பின் தூரப்பார்வை

மங்கி அருகில் தெளிவாக தெரிதல், வாகன முகப்பு லைட் ஒளி சிதறி தெரிதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். கண்புரைக்கு அறுவை சிகிச்சை முறையில் IOL

பொருத்துவதால் (கண்பரசுதல) நல்ல பார்வை கிடைக்கும். நல்ல பார்வை கிடைக்க ரெடினா நன்றாக இருப்பது மிகவும் அவசியம். தற்பொழுது நவீன முறையில் அறுவை சிகிச்சை

செய்வதால் உடனே வீடு திரும்பும் வசதி, குறைந்த நாட்கள் இடைவெளி யில் அன்றாட வேலைகளை செய்வது, போன்ற சிரமம் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை உள்ளது.

கண்பிரஷர்

கண்பிரஷருக்கும், உடம்பு பிரஷருக்கும் (பிளட் பிரஷர்) சம்பந்தம் கிடையாது. நமக்கு தெரியாமலே பார்வை குறைந்து கொண்டே போய் 70% nerve damage ஆனபின்பு தான்

அறிகுறிகள் தென்பட கூடும். எனவே 40 வயதிற் குட்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கண்களை பாதுகாக்க வேண்

டும். குடும்பத்தில் யாரேனும் Glaucoma இருந்தால் பிள்ளை களுக்கும் பரிசோதனை செய்தல் அவசியம். மருத்துவ ரின் ஆலோசனைப்படி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர்

அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம். நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்தால் மட்டும் தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரி

செய்வதற்கு அல்ல என்பதை Glaucoma உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவ ரின் ஆலோசனைப்படி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

Posterior capsular Opacity Surgery செய்த பிறகு பழையது போல் பார்வை மங்கலாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று PCO எனும் நிலை.

அறுவை சிகிச்சைக்கு பின் மங்கலான பார்வை 1 வருடத்திலோ 5 வருடம் கழித்தோ எப்பொழுது வேண்டும் என்றாலும் இந்நிலை ஏற்படலாம். பார்வை மங்கி விட்டது

என்று வருத்தப்பட தேவையில்லை. PCO இருப்பின் Yag laser உதவியுடன் அதை சரி செய்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம்.

இவ்வாறு டாக்டர் பென் ஐ கேர் சென்டர் டாக்டர்கள் பென் ரவீந்திரன், டாக்டர்.பிரவின் தாம்சன் தெரிவித்தனர்.

Leave a Reply