விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம் விட்ட சீனா

Spread the love

விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம் விட்ட சீனா

சீனா செய்திகள். எதிரி செய்திகள் .

உலக வல்லாதிக்கமாக மாறி வரும் சீனா தற்போது
புதிய விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம் விட்டுள்ளது .

சீனா கடற்படையில் மிக முக்கிய பாங்கை இந்த விமான தாங்கி கப்பல் வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது .

இந்த இராணுவ விமான தாங்கி கப்பலில் புதிய தொழில் நுட்பங்கள் பொருத்த பட்டுள்ளன .

முதல் திறன் தாக்குதல் ஆயுதங்களும் ,ராடார் கருவிகளும் ,பலவகை ஏவுகணைகள்,மோட்டார்கள் ,விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் என அணைத்து வசதிகளை கொண்டதாக இந்த விமான தாங்கி கப்பல் வடிவமைக்க பட்டுள்ளது .

தமது இராணுவ பலத்தை அதி வேகமாக பலமாக்கி முன்னேறி
வரும் சீனாவின் இந்த விமான தாங்கி கப்பல் செயல் பாடுகள் உலக வல்லாதிக்க அரசுகளை அதிர வைத்துள்ளன .

பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் அதிவேகமாக முன்னேறி வரும் சீனாவின் இந்த படைக்கல அதிகரிப்பும் அதன் திடீர் அசுர வளர்ச்சியும் உலக வல்லாதிக்க அரசுகளை கலங்கடித்து வருகிறது .

அமெரிக்காவின் ஆயுத தொழில் நுட்பங்களை திருடி அவற்றை அப்படியே காப்பி அடித்து ,சீனா போராயுதங்களை தமது தயாரிப்பில் தயாரித்து வருகிறது .இந்த விமான தங்கி கப்பலும் அவ்விதமான செயல் பாட்டின் ஒன்றாக உள்ளது .

அமெரிக்காவின் முதல்தர தாக்குதல் விமான வடிவமைப்பு விடயங்களை திருடி அவற்றை அப்படியே தயாரித்துள்ளது சீனா .

சீனாவின் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் மூழ்கிய அமெரிக்கா விமானம் ஒன்றை சீனா மீட்டு சென்றுள்ளதான தகவல்களும் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தின .

அவ்வாறான நிகழ்ச்சிகள் தொடரில் இந்த புதிய விமான தாங்கி கப்பல் வெள்ளோட்டம் விட்டுள்ள செய்தியானது இராணுவ பலத்தில் தாம் முதன்மையான ஒருவராக விளங்குவதை சீனா மீளவும் தெளிவு படுத்தியுள்ளது .

உலக நாடுகளின் முக்கிய வல்லாதிக்க அரசுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் இராணுவ வளர்ச்சிகளை வீழ்த்தி அதிவேகமாக சீனா வளர்ந்து வருகிறது .

இந்த சீனாவின் அசுர வளர்ச்சி என்பது விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம் விட்ட சீனா அரசின் தொலைதூர திட்டமிடல்கள் மற்றும் நாடுகளை ஆக்கிரமிக்க முனையும் செயல் திட்டங்களின் முற்றுகை வடிவமாக பார்க்க படுகிறது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply