வவுனியா கிணறுகளில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு

Spread the love

இங்கை -வவுனியா கிணறுகளில் இரு பெண்கள் சடலங்களாக மீட்பு

இலங்கை – வவுனியா அம்மி வைத்தான் கிராமத்தில் சிசு ஒன்று கிணற்றில் தவறி வீழ்ந்தநிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது .

கடந்த இரவு இந்த சிசுவின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு வவுனியா மருத்து வமனையில் மரண விசாரணைகளுக்காக வைக்க பட்டுள்ளது .

அதை தொடர்ந்து வவுனியா கொக்குவெளி பகுதியில் தனிமையில் வசித்து வந்த பத்தொன்பது வயதுடைய இளம் பெண் ஒருவரும் கிணற்றைல் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

அவரது வீட்டுக்கு சென்ற குடும்ப உறவினர்கள் அவரை காணவிலை என தேடிய பொழுதே வீட்டு கிணற்றைல் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார் .

இவர் தற்கொலை புரிந்தாரா ..? அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை .

சடலம் மீட்க பட்டு வவுனியா அரசினர் வைத்தியசாலையில் மரண உடல் கூற்று சோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

ஒரே நாளில் கிணறுகளில் இருந்து இரண்டு பெண்கள் சடலங்கள் மீட்க பட்டுள்ளது அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு முன்னரும் வவுனியா பகுதியில் கிணறுகளில் இருந்து பெண்கள் ,சிறுவர்கள் சடலங்களாக மீட்க பட்டது வரலாறாக வீழ்ந்து உறங்கும் நிலையில்

தொடர்ந்து கிணறுகளில் மனித சடலங்கள் மிதப்பதே இந்த பீதிக்கு காரணமாக அமைந்துள்ளது ,

இதுவரை இந்த உயிர்பலிக்கான உடனடி காரணம் உறுதியாக தெரியவரவில்லை .

குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளின் முடிவிலே மேற்படி மரணங்கள் தொடர்பான திடுக்கிடும் விடயங்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மரண விசாரணை அறிக்கையும் இதுவரை வழங்க படாத நிலையில் இதன் முழுமையான விபர கோப்பு இதுவரை தெரியவரவில்லை .

மரண விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

களமுனைக்கு சென்றவர்களிடம் போலீசார் வாக்கு மூலங்கள் பெற்று வருவதுடன் ,இதர தடவியல் நிபுணர்கள் தடயங்களை கண்டறியும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்ந்து ந்த பகுதியில் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவுகிறது .

தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply