வவுனியாவில் வீதியை மறித்த முஸ்லிம் மக்கள்-குவியும் குப்பை வாகனங்கள் video

Spread the love

வவுனியாவில் வீதியை மறித்த முஸ்லிம் மக்கள்-குவியும் குப்பை வாகனங்கள் video

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை ஏற்றாது வவுனியா நகரசபை வளாகத்தில் இன்று (22.01)

காலை தொடக்கம் 8க்கு மேற்பட்ட குப்பையேற்றும் வாகனங்கள் தரித்து நிற்கின்றன.

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குப்பை மேட்டில் வவுனியா நகர எல்லைக்குற்பட்ட குப்பைகள்,

வைத்தியசாலை கழிவுகள், பாவனையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான மருந்துகள் போன்றவற்றினை குறித்த இடத்திற்கு லொரிகள், உழவியந்திரங்கள் மூலம்

கொண்டு வந்து வீசுவதுடன் பல்வேறு சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன் மற்றும் மழை காலங்களில் அதிகளவு துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து பிரதேச இஸ்லாமிய

மக்கள் இன்று காலை 6.00 மணி தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மேற்கொள்வதினையடுத்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதில் சிக்கல்

ஏற்பட்டுள்ளதினால் 8க்கு மேற்பட்ட குப்பையேற்றும் வாகனங்கள் இன்றையதினம் கடமைக்கு செல்லாது நகரசபை வளாகத்தில் தரித்து நிற்கின்றன.

குறித்த பகுதியில் பல லட்சம் பெறுமதியான குப்பைகளை மீள் சுழற்சி இயந்திரமும் கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிருபர் – வெடியரசன்

வவுனியாவில் வீதியை மறித்த
வவுனியாவில் வீதியை மறித்த

Leave a Reply