மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீதித்தடை-பழிவாங்கும் கோட்டா அரசு

Spread the love

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீதித்தடை-பழிவாங்கும் கோட்டா அரசு,

மலையக நுவரெலியா மாவட்;டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வெதமுல்லை லில்லிஸ்டான்ட் தோட்டம் ஊடாக கெமிதன் தோட்டத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு லில்லிஸ்டான்ட் தோட்டத்தில் வாகன தடை போடப்பட்டுள்ளது.

நாளாந்தம் இந்த பாதையின் ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்ளுக்கு 100.00 ரூபாவும் முச்சக்கரவண்டிக்கு 100.00 ரூபாவும் காருக்கு 300.00 ரூபாவும் லொரிக்கு 500.00 ரூபாவும் பஸ் போன்றவற்றுக்கு 500.00 ரூபாவும் தோட்ட நிர்வாகத்தினால் அறவிடப்பட்டு வருகின்றன.


இதனால் இந்த பாதையை பாவித்து வரும் பெருந்தோட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை அறவிட வேண்டாம் என மக்கள் சம்பந்தபட்டவர்களுக்கும் பொலிஸிற்கும் முறைபட்ட செய்த போதும் அறவிடுவதினை நிருத்தவில்லை.

மேற்படி தோட்;;;டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி அரசியல் பிரமுகர்களின் முயற்சியில் அரசாங்கத்தினால் திருத்தி அமைக்கபட்டதாகும்.

மற்றைய பகுதி போக்குவரத்திற்கு உகந்தாக இல்லை மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த பாதையில் செல்வதால் வாகனங்களே பழுதடையும்.

இவ்வாறான நிலையில் வாகனங்களுக்கு பணம் அறவிடுவது வேதனைக்குறியது.

அது மட்டுமல்ல அரசாங்க நிதியில் அமைக்கபட்ட பாதையில் இந்த நாட்டின் மக்கள் பயணிப்பதற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேற்படி பாதையை தோட்ட நிர்வாகம் முறையாக திருத்தி அமைத்து பராமறித்து இவ்வாறு அறவீடுகளை மேற்க்கொண்டால் பரவாயில்லை. அதுவும் இல்லை

மேற்படி பாதையினை 150 க்கு மேற்பட்ட பெருந்தோட்ட குடும்பங்களும் 100 க்கு மேற்பட்ட விவசாயிகலும் பாவித்து வருகின்றனர்.

இந்த பிரதேசத்தில் மரக்கரி உற்பத்தி அதிகம் இதற்கு நாளாந்தம் பல வாகனங்கள் சென்று வருவதும் வழக்கம்.

இவ்வாறான நிலையில் பணம் அறவிடுவது தங்களுக்கு மேலும் வாழ்க்கை சுமையை அதிகரித்து உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

தங்களிடம் சொந்த வாகனம் இல்லை. தனியார் வாகனங்களையே வாடகைக்கு பெற்று வருகின்றோம்.

இந்த வாகனம் வெளியார் வாகனம் என கூறி பணம் அறவிடுவது பொருத்தமானது அல்ல என மேலும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இந்த நிலைமையை நேரில் ஆராய முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஸ்தலத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டார்.

இதன் போது தோட்ட அதிகாரிகள்¸ பாதிப்புக்கு உள்ளான மக்கள்¸ கொத்மலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர். இதன் போது ஏற்பட்ட வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் இந்த பணம் அறவிடும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொத்மலை பொலிஸ் நிலையத்தில் இதற்கான விசாரணைகள் 30.12.2019 நடைபெற தீர்மாணம் எட்டப் படவுள்ளது என்பதாகும் என .

இந்த விடயம் தொடர்பில் மேற்படி தோட்;டத்தின் உயர் நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய பொழுது. நாங்கள் மேற்படி தோட்ட மக்களுக்கு பணம் அறவிடுவது இல்லை.

வெளியில் இருந்து வரும் வெளி வாகனங்களுக்கே அறவிடுகின்றோம்.

இதில் வரும் பணத்தை கொண்டு இந்த பாதையை பராமரித்து வருகின்றோம். இந் நிலையில் எங்களை குறை கூற வேண்டாம் என்று கூறினார்.

மலையக
மலையக

Leave a Reply