தீயில் எரிந்த வீடு – தவிக்கும் குடும்பம் – photo

Spread the love

நுவரெலியா பகுதியில் –தீயில் எரிந்த வீடு – தவிக்கும் குடும்பம் .கண்ணீர் கதை

வெதமுல்ல தோட்டம் கெமினதன் தோட்டத்தில் கடந்த 15.12.2019 ஏற்பட்ட தீயில் எரிந்த வீடு அழிந்துள்ளது ;

தங்களது வீட்டையும் வீட்டு பொருட்களையும் அணைத்து ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றது 02 பிள்ளைகளுடன் கூடிய ஒரு இளம் குடும்பம்

இந்த குடுபம் உதவிகளுக்காக நுவரெலியா பிரதேசத்தற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேலையில் நுவரெலியாவில் சந்திக்கும்; வாய்பு கிடைத்தது.

இவர்கள் இரண்டு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு இருவரும் ஏதோ கவலையுடன் செல்வதை கண்டேன்.

உடனே என்ன பிரச்சனை ஏன் கவலையாய் செல்கின்றீர்கள் என்று வினாவிய போது. தாய் கண்ணீர் மழ்க தீயில் எரிந்த வீடு நிலமையை கூறினார்.

எங்களது வீடு கடந்த 15 ஆம் திகதி தீ பித்து தீக்கு இறையாகி விட்டது. நான் வீட்டை விட்டு வெளியில் சென்று விடு திரும்பும் போது வீடு தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்து.

அயலவர்களின் உதவியுடன் தீயில் எரிந்த வீடு கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தலும் வீட்டு பொருட்கள் பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள்

ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்ல வாங்கிய அனைத்து உபகரங்களும் சில ஆவனங்களும் எங்கள் நாள்வரின் உடைகளும் சாப்பாட்டு பொருட்களும் முற்றாக எரிந்து விட்டது.

நான் தோட்டத்தில் தொழில் வேலை செய்கின்றேன் கணவர் கொழும்பில் கூலி வேலை செய்கின்றார்.

தோட்டத்தில் வீடு தரததினால் சொந்தமாக சிறுக சேர்த்த பணத்தில் இருந்து தற்காலிகமாக கட்டிய வீடே இது.

தற்போது வீடும் எரிந்து விட்டது. அயலவர் ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக தங்கி வருகின்றோம். எங்களுக்கு வீடும் இல்லை வீட்டு பொருட்களும் இல்லை சாப்பிட சாப்பாடு கூட இல்லை.

இந் நிலையில் எங்களுக்கு ஒரு வீடும் தேவையான பொருட்களையும் எங்களது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகளை செய்து எங்கள் வாழ்வை மீள் கட்டியெழுப்ப உதவி செய்யுமாறு கூறினார்

கணவர் ஏ.வினாயகமூர்த்தி மனைவி கே.பொண்மலர் மகன்மார்கள் வி.திலக்சன் (12) இவர் இறம்பொடை இந்து கல்லூரியில் தரம் 08 வி.விதுசன் (07) ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயத்தில் தரம் 08 கல்வி பயின்று வருகின்றனர்.

மேற்படி குறித்த இரண்டு மாணவர்களுக்கும் பாடசாலைக்கு தேவையான எந்தவிதமான பொருட்கள் உடைகள் உபகரணங்கள் எதுவும் இல்லை.

இந்த குடுபம் தங்களின் வாழ்வை கொண்டு செல்ல நல்லுல்லம் படைத்தவர்களிடம் இருந்து உதவிகளையும் தங்களுக்கான ஒரு பொருத்தமான வீட்டையும் எதிர்பார்க்கின்றனர்.

சம்பந்தபட்டவர்கள் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கு உதவிட விரும்புவார்கள் எம்மை தொடர்பு கொள்ளவும் .

கண்ணீரில் தவிக்கும் இந்த வறுமை குடும்பத்திற்கு தமிழர்களே உதவி புரியுங்கள் ,நீங்கள் வழங்கும் சிறு உதவி இந்த குடும்பத்தை வாழ வைக்கும் 0094 777375053

மேல் உள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு குறித்த குடும்பத்திற்கு உதவிகளை புரியுங்கள் ,மேலதிக தொடர்புகளிற்கு எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

நாம் தமிழராய் நாம் இணைவோம் ,உயிர்காப்போம் ,ஒன்றிணைந்து கரம் கொடுப்போம் .ஒன்றுபட்டு எழுவாய் தமிழா .கண்ணீர் துடைக்க கரங்கள் தருவாய் தமிழா .

முற்றாக தீயில் எரிந்த வீடு
கண்முன்னே தீயில் எரிந்த  வீடு
திடீரென தீயில் எரிந்த  வீடு
இலங்கையில் தீயில் எரிந்த  வீடு

Leave a Reply