தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்

Spread the love

தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்

கொழும்பு தமிழ் சங்கத்தில் பூங்கோதையின் “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டில் எனது உரை


கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார்.
“யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.”


“உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக போராடியவங்க.”


“இந்த உணவு, மருந்து… இல்லாம நம்ம தமிழர், யுத்த காலத்தில் வடக்கில், பொருளாதார தடைல வாழ்ந்தாங்க.”


“மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர், யுத்தம் இல்லாமலேயே அப்படி வாழ்றாங்க.”
“ஆனாலும் கொள்கை அடிப்படையில் நாம் கோதாவுக்கு எதிராகத்தான் நிற்கிறோம். வேறு எவரையும் விட அதிகமாக நிற்கிறோம்.”


“நாளைக்கு உணவு, கேஸ், கிடைத்தால் நீங்க போராட்டத்தை கைவிட்டு போயிடுவீங்கன்னு நமக்கு சந்தேகம் இருக்கு.”


“நம்ம மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்தாங்க.”


“போராளிகள் செத்தார்கள். அது பிரச்சினை இல்லை. அவர்களின் சாவு, வீரச்சாவு.”
“ஆனால் எமது அப்பாவி மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதை மறந்து நீங்கள், பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடினீர்கள். இது உண்மை.”


“ஆகவே, எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.”
“நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.”


“அதுவரைக்கும் நாம் “நிறமில்லா மனிதர்” களாகவே இருப்போம்.”
“இது தலைநகர மாவட்ட எம்பியான எனது நிலைப்பாடு.”

    Author: நலன் விரும்பி

    Leave a Reply