சமூக விழிப்புணர்வு குறும்படம், இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்

சமூக விழிப்புணர்வு குறும்படம் இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்
Spread the love

சமூக விழிப்புணர்வு குறும்படம், இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இளைஞர் அபிவிருத்தி “அகம்” இணைந்து நடாத்தியமா பெரும் சமூக விழிப்புணர்வு

குறும்படம் மற்றும் இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழா நேற்று மாலை (29) உவர் மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி “அகம்” இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினர்களாக திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன், பட்டைய முகாமைக் கணக்காளர் கலாநிதி இ.ஸ்ரீஞானேஸ்வரன் ஆகியோரும், சிறப்பு

சமூக விழிப்புணர்வு குறும்படம் இளைஞர்களின் ஆளுமைவிருத்தி தொடர்பான நாடக வெளியீட்டு விழாவும் விருது வழங்கி வைப்பும்

விருந்தினர்களாக குறும்படத் தயாரிப்பாளர் இயக்குனர் வடமலை ராஜ்குமார், உள்ளூராட்சி திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் சி.சர்வேஸ்வரன், உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் அதிபர் க.ரவிதாஸ்,

கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் ப.கோணேஸ்வரராஜா, இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், மாவட்ட

செயலக மாவட்ட சமூகவேவை அதிகாரி தவராஜா பிரணவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில், மனிதி, வீழ்வேனென்று, அடையல், அறுவதை, வெற்றிக்கதை, பள்ளிக்கூடம் என்ற குறும்படங்களும், தலைமகள் என்ற நாடகமும்

அரங்கேற்றப்பட்டது. இதில் மதனி என்ற குறும்படம் முதலாம் இடத்தினையும், வீழ்வேனென்று என்ற குறும்படம் இரண்டாம் இடத்தினையும், பள்ளிக்கூடம் என்ற குறும்படம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நடிகருக்கான விருதினை வெற்றிக்கதை குறும்படத்தின் மோகேந்திரன் சாந்தகோபு, வி.கிருபானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த இயக்கம் மற்றும் தயாரிப்புக்கான விருதினை மனிதி குறும்படத்தின் விநாயகமூர்த்தி அபிவர்ஷன் பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை மனிதி குறும்படத்தின் ஜே.செலினி பெற்றுக்கொண்டார்.

சிறந்த இசை மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான விருதினை வீழ்வேனென்று குறும்படத்தின் ஜே.சமீல், ஜே.டி.கொட்வின் செல்லர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பள்ளிக்கூடம் குறும்படத்தின் விவேக்ஷன் மனோகரனும், கோ.கம்ஸத்வேனியும் பெற்றுக்கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இளைஞர்களின் ஆளுமைகளை டிஜிட்டல் யுகத்தில் பயனுள்ளதாக ஆக்கும் நோக்கிலும்,


இளைஞர்களுக்கு பயனுள்ள தகவல்களை நம்பிக்கையூட்டும் வகையில் கொண்டு செல்வதற்கும், உரிமை சார் கருத்துக்களை


விழிப்புணர்வு செய்வதற்கும் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட குறும்படம் மற்றும் நாடக வெளியிடலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான விருது,


சான்றிதழ்களை இன்றைய அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபுஅலா –