ஒருமுறை மன்னிப்பாய் …!

Spread the love

ஒருமுறை மன்னிப்பாய் …!

தேடி வந்த வேளையிலே
தேவையில்லை என்ரெறிந்தேன் ..
ஓடி வரும் கண்ணீரில்
உன் நினைவை கழுவுகிறேன் …

ஐ விரல்கள் கூப்பி வந்தேன்
ஆருயிரே மன்னிப்பாய் ..?
ஏது யான் செய்திடுவேன்
என்னை கொஞ்சம் எண்ணிப்பாய் …?

பிரிவு ஒன்று வாட்டையிலே – உன்
பிரியமதை புரிந்து கொண்டேன் ..
உள்ளத்திலே வலிகள் தாங்கி
உலவையிலே என் செய்வேன் …?

பேரழகே எந்தனது
பெருமனமே மன்னிப்பாய் …
உயிர் கொடுத்து உறவாட
உள்ளமே பேசிடுவாய் ….

வாயில் வீழ்ந்தா சொற்களது
வாயிலிலே எறிந்து விட்டேன் …
கூப்பி கரம் கால் வீழ்ந்தேன்
குலமகளே மன்னிப்பாய் ….

போற்றி பாடும் என் மனதில்
பொன்மகளே நீ பெருமகளாம் …
ஏற்று என்னை சென்றிடுவாய்
என் வலியை போக்கிடுவாய் …..

உள்ளமதை திறந்து பார்
ஊர்வலமாய் வருகிறேன் …
கண் விழும் நீர் துளியை
கரம் தந்து துடைத்திடுவாய் ….

தூங்க என்னால் முடியவில்லை
துயர் தாங்க இயலவில்லை …..
என்னுயிரே மன்னிப்பாய்
என் மனதை புரிந்துடுவாய் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -08/08/2019

      Leave a Reply