எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க
Spread the love

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

கடையில் மீன் வாங்கினால் இந்த முறையில் செய்து பாருங்க ,சுவையோ வேற லேவலாக இருக்கும் .

சமைப்பது முக்கியமல்ல ,அதனை சுவையாக சமைப்பதில் தான் அதன் வெற்றி உள்ளது .

வாய்க்கு சுவையாக ருசித்து சாப்பிட இது போல பண்ணுங்க மக்களே .

வாங்க இப்ப மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

மீன் குழம்பு செய்வது எப்படி ..?
சுவையானமீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள்
.

புளி எடுத்து பாத்திரத்தில் ஊற வைத்திடுங்க .


இப்போ கடாய் சூடாக்கி அதில எண்ணெய் விட்டு ,ஒரு கப் அளவு பொடியாக வெட்டிய வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .கூடவே பூண்டு ,கருவேப்பிலை ,சீரகம் ,மிளகு ,நன்றாக வதக்கி வாங்க .

எந்த மீன் வாங்கினாலும் குழம்பு இப்படி சுவையா செய்ங்க

இவை ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .

அதன் பின்னர் அதே கடாயில் மூன்று கரண்டி நல்லெண்ணெய் , ஒரு கரண்டி கடுகு வெந்தயம் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,இரண்டு பச்சை மிளகாய் ,பொடியாக வெட்டியா தக்காளி ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

அதன் பின்னர் மசலா சேர்க்கணும் .இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,கரம் மசலா ,மல்லி தூள் ,மஞ்சள் தூள் ,போட்டு நன்றாக வதக்கி வாங்க .

மசாலா பச்சை வாசம் போன பின்னர் அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீ,புளி தண்ணியை விட்டு கலக்கி விடுங்க .

இவை நன்றாக சூடானதும் ,மீனை போட்டு மூடி போட்டு மூடி வேக வைத்திடுங்க .திக்கா வேணுமா என்றால் அதற்கு ஏற்ப வேக வைத்திடுங்க .

இப்போ சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .இது போலவே நாளும் செய்து சாப்பிடுங்க மக்களே .