இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு

Spread the love

இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு,- இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மிகுந்த பரபரப்பையும் ,பீதியையும் ஏற்படுத்திய வண்ணம் நாட்கள் நகர்கிறது ,என்றுமில்லாதவாறு மகிந்த குடும்பத்தின் நெருக்கமானவர்கள் பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தில் அமர்த்தபட்டுள்ளனர் ,

அதற்கு மைத்திரி தாராள வழிகளை திறந்து விரித்தார்,இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்க பட்டுளளார் ,அதுபோலவே கடல்படையும் ,இந்த தேர்தலில் தாம் வெற்றி பெறா விட்டால் இராணுவத்தின் இரும்பு கரம் கொண்டு ஆட்சியை கைப்பற்றும் நகர்வில் மகிந்த அண்ட் கோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,

தேர்தல் ஆணையரின் போக்கும் ,அவ்வாறே காணப்படுகிறது ,பெரும் மேசடிகள் மத்தியில் இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது ,அத்துடன் வாக்கு சிதறல்களை மேற்கொள்ளும் முகமாக ஒருபோதும் இல்லாதவாறு 41 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றனர் ,இதில் மூன்றாவது பெரும் சக் தியாக யார் உள்ளனர் என்பதையும் ,மக்கள் ஏதுவாக உள்ளனர் எனபதை படம் பிடிக்கவும் இந்த தேர்தல் வரலாற்று களமுனையாக வீழ்ந்து கிடக்கிறது ,

மக்கள் குறிப்பாக தமிழர் வாக்குகள் இந்த வெற்றியை தீர்மானிக்க போகின்றன ,அவர்கள் ஆதரவு யானை கட்சிக்கு உள்ளது ,ஆகவே அதனை தடுக்கும் நோக்குடன் ,வெளிநாட்டு சிங்களவர்கள் இலங்கை அழைக்க படுகின்றனர் ,இந்த வாக்குகளை சரி செய்யவே இந்த உள்ளக விளையாடல்கள் நடக்கின்றன .செயலும் நகர்வும் மகிந்த அண்ட் கோவே ஆட்சியில் அமர்வார்கள் என்பது நிழலாக தெரிகிறது

Author: நலன் விரும்பி

Leave a Reply