அரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்; வடக்கு ஆளுனர்

Spread the love

அரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்; வடக்கு ஆளுனர்

அரசியல் காரணங்களுக்காக அநீதி இழைக்கமாட்டேன்என வடமாகாண ஆளுனர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஓன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

பாடசாலை மற்றும் வைத்தியசாலையின் குறைபாடு ஆகிய இரண்டு விடயஙகள் தொடர்பாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஜனாதிபதியுடேன்

உரையாடியிருந்தோம். இவற்றுக்குரிய தீர்வுகளை உடனடியாக பெற்றுத் தருவதாக அவர் எமக்கு வாக்குறுதியளித்துள்ளார். எனவே இந்த இரு

பிரச்சனைகளும் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். அதைவிட இந்தப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக கஸ்ரப்படும் வறுமையான மக்கள் பற்றியும் நான்

அறிந்திருக்கின்றேன். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களைப பற்றி அறிந்திருக்கின்றேன்.

நல்லகுடிநீர் வசதி இல்லை என்பது தெரியும். உங்களில் பலருக்கு வீட்டுவசதி, மலசலகூட வசதி வழங்கப்படவில்லை என்பதும் தெரியும். எனவே இந்தப் பிரச்சனைகளை

தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படும். நிச்சயமாக உங்களோடு ஒருவராகவும், உங்களது பணிகளில் ஒருவராகவும் நான் இருப்பேன்.

இன, மத, மொழி, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் நீதியான சேவை தொடரும். அரசியல் காரணங்களுக்காவோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட

காரணங்களுக்காகவோ அநீதிகள் இழைக்கப்படுவதை தடுப்பேன். உங்களுக்கான தேவைகளை மாகாண

நிர்வாகத்தின் ஊடாக ஏற்படுத்தி தருவேன் எனத் தெரிவித்தார்.

நிருபர் – வெடியரசன்

Leave a Reply