அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Spread the love

அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்காவின் இராணுவ நிலைகள் அமைந்துள்ள ஈராக் நாட்டின் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவுடன் இயங்கும் கிசு புல்லா விடுதலை அமைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை முப்பது ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது .

இது மட்டுமா சிரியா பகுதியில் உள்ள அமெரிக்காஇராணுவ நிலைகள் மீதும் ஈரான் ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க படைகள் ,மக்கள் படுகாய மடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள ஈரான் ஆதரவு அமைப்புக்களின் ஐந்து நிலைகள் மீது தமது இராணுவம் திடீர் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

தமது இந்த திடீர் திருப்பி பதிலடி தாக்குதலில் ஈரானிய கிளர்ச்சி ஆதரவு படைகளின் மிக முக்கிய இராணுவ மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும்


இவற்றில் குறிப்பாக ஆயுத தொழில் சாலைகள் உள்ளடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இந்த தாக்குதலில் ஈரானின் முதுகு எலும்பு இங்கே முறிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா வீர வசனம் பேசி கொள்கிறது .
ஆனால் ஈரானோ உலக சண்டியர் அமெரிக்காவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

,அணு ஆயுத தயாரிப்பு என்கின்ற போர்வையில் ஈரான் மீது பொருளாதர தடைகளை கடந்த பத்து ஆண்டுகளாக போட பட்டிருந்தாலும் ஈரான் மசிந்து போவதாக தெரியவில்லை .

மேலும் அது தனது இராணுவ பலத்தை வீச்சாக்கி உள்ளத்துடன் அமெரிக்காவுடன் வலிந்து தாக்குதலை நேரடியாகவும் ,தனது நேச ஆதரவு அமைப்புக்கள் ஊடாகவும் மேற்கொண்டு வருகிறது .

இஸ்ரல் ,அமெரிக்காஒன்றாக இணைந்து ஈரான் அணு உலைகள் மீது வான்வழி ஊடாக திடீர் தாக்குதலை நடத்த திட்டம் தீட்டி வருகிறது ,அதற்கு தகுந்த பதிலடி தரும்

வகையில் தனது பாதுகாப்பு வியுயுகத்தை அமைத்து ஈரான் நகர்ந்து செல்கிறது .

முற்றி வெடித்து பறக்கும் இந்த உலக வல்லாதிக்க போட்டி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் செயல் பாட்டுக்கு இந்த இராணுவ சுரண்டல் விளையாட்டுக்கள்

வாசல்களை திறந்து வைக்கும் என நம்ப படுகிறது .

பெரும் சமர் ஒன்றை மூட்டி பல கோடி மக்களை கொன்று குவிக்க காத்திருக்கும் உலக வல்லாதிக்கத்தின் வெறி செயல் என்று ஆரம்பிக்கும் என்பதே மனித குலத்தை

நடுங்க வைக்கும் செய்திகளாக கசிந்த வண்ணம் உள்ளது .

வன்னி மைந்தன் –

அமெரிக்கா

Leave a Reply