ஹிருணிகா வழக்கு ஒத்திவைப்பு

இதனை SHARE பண்ணுங்க

ஹிருணிகா வழக்கு ஒத்திவைப்பு

தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் வருடம் மே மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை எதிர்வரும் வருடம் மே மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினம் வழக்கின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்குமாறு இரு தரப்பின் சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply