வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
இதனை SHARE பண்ணுங்க

வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.

கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பஸ் வண்டியுடன் மோதியதிலே பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதனை SHARE பண்ணுங்க