விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

Spread the love

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா பேமிலி மேன் என்ற வெப் தொடரிலும் நடித்து இருக்கிறார். வெப் தொடருக்கு மாறியது குறித்து சமந்தா

கூறும்போது, “டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். வெப் தொடர்கள் இந்தியா முழுவதும் பிரலமாகி வருகின்றன. ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கிறது.

எனவேதான் வெப் தொடரில் நடித்தேன். இதில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது” என்றார்.

சமந்தா மேலும் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக இருக்கும். நினைத்த மாதிரி திரையில் வராமல் போனால் அதில்

நடித்தவர்களை விமர்சிப்பார்கள். நினைத்த மாதிரி நடிப்பு அமைந்துவிட்டால் பாராட்டுகள் குவியும். சூப்பர் டீலக்ஸ்

படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் இப்படித்தான் யோசித்தேன்.

விஜய் சேதுபதி படத்தில் நடிக்க பயந்தேன் – சமந்தா

சூப்பர் டீலக்ஸ் பட போஸ்டர்

அந்த கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன். அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற

தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள் எனவே நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன். இறுதியில் நடிப்பது என்று முடிவு

செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்.

இவ்வாறு சமந்தா கூறினார்.


Spread the love