25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்

Spread the love

25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 25 வயது வாலிபர் மீது பக்கத்து வீட்டு இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம்

அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்
ஆசிட்
உன்னாவ்:

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பவானிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் யாதவ் (வயது

25). இவர் பால்பண்ணை வைத்துள்ளார். இன்று காலை யாதவ் தனது பண்ணையில் வேலை

பார்த்துக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ரோகித் மீது ஆசிட் வீசியதாக தெரிகிறது.

இதையடுத்து ரோகித்தின் உறவினர்கள் அவரை லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில்

அனுமதித்தனர், அவர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ரோகித்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,

ஆசிட் வீசியதாக கூறப்படும் அந்த இளம்பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

‘இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள். சில மாதங்களாக இருவரும் நட்பு பாராட்டி வந்தனர்.

இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீசார் தெரிவித்தனர்.


Spread the love