வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto

Spread the love

வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto

வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார்

மீட்டுள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்Nதுகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியில்

அமைந்துள்ள வீடொன்றில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா

என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் மகளுடன் இணைந்து

உணவருந்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். அதிகாலை 5.00 மணியளவில் வெளியே சென்று பார்த்த சமயத்தில் தூக்கில்

தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதன் பின்னரே பொலிஸ் மற்றும் கிராம சேவையாளருக்கு தகவல்

வவுனியாவில் -வீட்டில் உறங்கியவர் மரத்தில் இருந்து சடலமாக மீட்புphoto

வழங்கியதாக முதியவரின் மகள் தெரிவித்தார்.

முதியவர் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்ட இடத்தில் அவரது இரு காலணிக்கும் இடையில்

டோச் லைட் உள்ளதுடன் தூக்கில் தொங்கியுள்ள மரம் சிறிதாக காணப்படுவதனாலும் முதியவரின் மரணத்தில்

சந்தேகம் நிலவுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம

சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் குற்ற தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோருக்கும் அறிவித்தல் வழங்கப்பகட்டுள்ளது.

நிருபர் – வெடியரசன்

வீட்டில் உறங்கியவர் மரத்தில்
வீட்டில் உறங்கியவர் மரத்தில்

Spread the love