வடக்கு தமிழர் மனங்களை வெல்வாரா முத்தையா முரளி – ?

வடக்கு தமிழர் மனங்களை வெல்வாரா முத்தையா முரளி – ?

உலக மக்கள் மத்தியில் கிரிக்கட் விளையாட்டில் கொடிகட்டி பறந்தவரும்
அதன் ஊடக பெரும் ரசிகர்கள் படலத்தை வைத்துள்ள முத்தையா முரளிதரன் தற்போது இரும்பு கரம் கொண்டு தமிழர்களை கொன்று குவித்த கோட்டாவின் ஆட்சியில் வட தமிழர்களின் தாயக பூமியின் ஆளுநராகி நியமிக்க படவுள்ளாராம்

.இவர் அவ்விதம் நியமிக்க பட்டாலும் அடித்தட்டு மக்களின் அப்பிலாசைகளை தீர்பதற்க்கோ அன்றி அவர்கள் உரிமை பிரச்சனைக்கு தீர்வு காணவோ முற்படுவாரா .?

கொழும்பு வழங்கும் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு பொம்மையாக இருப்பரே அல்லாது தமிழர் விரும்பும் விடயங்களை தீர்க்கவும் அவர்களது மனங்களை வெல்லவும் இவரால் முடியாது ,

விக்கட்டுக்களை வீழ்த்திய விளையாட்டு அல்ல ராசா இது ,இது வலிபட்ட மனங்களை வெல்ல அடிக்க வேண்டிய பந்தின் தூர வீச்சு அதிகம் ,தான் சேர்த்து வைத்த நல்ல பெயரை இதன் ஊடாக நாறடிக்கும் நிலையில் முத்தையா முரளிதரன் சென்றுள்ளார் ,

ஒரு பக்குவமான அரசியல் நிலைகளை அறிந்து அதன் ஊடாக ஆட்சியாளர்களுடன் தர்க்கம் புரிந்து இன விடுதலைக்கும் ,அதன் அடக்க பட்ட தமிழர்களுக்கும் விடுதலை வாங்கி தர கூடிய ஒருவரே அவசியம் ,

அதனை சிங்கள தனித்துவ வாக்குகள் மூலம் வெற்றி பெற்று ஆட்சியில் ஏறியுள்ள இரத்தக்கறை படிந்த கொத்தவினால் பெற்றுத்தர முடியாது என்பதற்கு முரளியின் தெரிவு அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது ,

கிரிக்கட் புகழ் கவர்ச்சியின் மூலம் இனமான தமிழர்களின் மனங்களை வென்றுவிடலாம் என கோத்தபாய கற்பனை கட்டுவது வீண் என்பது விழுந்து மடிய போகும் காலங்கள் உணர்த்தும் என்பதே நமது தீர்க்கமான கணிப்பாக வெடித்து வீழ்கிறது .

தோற்று போன மகிந்த குடும்பத்தின் அசைவுகளின் வழி வடியாக இவை மலர்கிறது ,போரை வென்றது போல தமிழர் மனங்களை இலகுவாக வென்றிட பலவழிகள் உள்ளன

,அதனை இந்த மகிந்த குடும்பத்தால் சாதிக்கவும் செயல் படுத்தவும் முடியாது உள்ளது அவர்களின் இனவாத ,போர் வெற்றிகள் மறைத்து போடுவதை நகர்வுகள் தெளிவாக காட்டுகின்றன ,

வடக்கு ஆளுநராக இம்முறை முரளி அமர்த்த பட்டால் அது அவரின் புகழ் எழுச்சிக்கு வீழ்ந்த முதல் அடியாகவும் தமிழர்களினால் ஒதுக்க படும் நபராகவும் மாற்றம் பெறுவார் என்பது இப்போதே அடித்து கூறலாம் – வன்னி மைந்தன் –

Share this:

Author: நிருபர் காவலன்