றிசாட் பதியுதீனுக்கு எதிராக வவுனிய பிரதேச சபை போராடட்ம -தொடரும் குழப்பம் photo

Spread the love

றிசாட் பதியுதீனுக்கு எதிராக வவுனிய பிரதேச சபை போராடட்ம -தொடரும் குழப்பம் photo

வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

ரிசாட் பதியுதீன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தை தகாத வார்த்தை

பிரயோகத்தின் மூலம் விமர்சித்துள்ளமையை கண்டித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களால்

இவ் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ளூஎமது சபை தலைவரை அவதூறாக பேசிய பாராளுமன்ற

உறுப்பினர் ரிசாட்டுக்கு கண்டனம், குப்பைமேட்டுக்கு அருகில் குடியேற்றம் செய்தது யார்? மாவட்ட அபிவிருத்தி

குழுவுக்கு தெரியாதா?, குடியேற்றத்தை குப்பை மேட்டுக்கு அருகாமையில் செய்ய கூடாது என்று தெரியாதா,

குப்பைகளை எங்கே போடுவது’ போன்ற வாசகங்களை தாங்கி நின்றனர்.

முன்னாள் அமைச்சர் அவர்கள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தை ஒரு

மடமைத்தனமானவர் என்று குறிப்பிடுவது உண்மையிலேயே அவருக்கு தான் அது பொருத்தமாக

அமையும். அந்த மக்களை குப்பைமேட்டில் குடியேற்றி விட்டு, அந்த மக்களை கிணற்றில் தள்ளிவிட்டு இன்று

அவர்களுக்குறிய சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேசுகிறார்.

இவர் பல வருடங்காக அமைச்சராக இருந்துள்ளார். அப்போது மக்களுக்குரிய தீர்வினை வழங்காது

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் குப்பை மேட்டிற்கு ஒரு தீர்வு வேண்டுமென பாராளுமன்றத்தில் தெரிவிக்கின்றார்.

ஆனால் இரண்டு மாத காலத்திற்கு முன் வந்த அரசாங்கத்திற்கு முன்வைக்கின்ற கோரிக்கையினை இவர்

இவ்வளவு காலமாக அமைச்சராக இருந்த சமயத்தில் ஏன் முன்வைக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்

நிருபர் – வெடியரசன்

றிசாட் பதியுதீனுக்கு எதிராக
றிசாட் பதியுதீனுக்கு எதிராக

Spread the love