ரஜினியே சொல்லிட்டாரு….. விரைவில் திருமணம் – யோகிபாபு

இதனை SHARE பண்ணுங்க

ரஜினியே சொல்லிட்டாரு….. விரைவில் திருமணம் – யோகிபாபு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. லைக்கா புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து இருக்கிறார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி, விவேக், ராகவா லாரன்ஸ்,

அருண் விஜய், யோகி பாபு, டைரக்டர்கள் ‌ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், இசை அமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டனர்.

தர்பார் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படத்தின் கதாநாயகியான

நயன்தாரா வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

விவேக், யோகிபாபு

இந்த விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் யோகிபாபு, “’பாட்ஷா’ படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக்

கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா?. ரஜினி சார் எனக்கு நிறைய சொல்லி கொடுத்தார்.

அவர் படத்துக்கு காமெடி நடிகரே தேவை இல்லை. அவரே சூப்பரா காமெடி பண்ணுவார். யோகிபாபுவிடம் திருமணம்

குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா?

கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும். உனக்கு தை மாதம் கல்யாணம் நடக்கும் நான் வருகிறேன் என

ரஜினி சார் என்னிடம் சொன்னார். இவ்வாறு யோகிபாபு கூறினார்


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply