பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு

இதனை SHARE பண்ணுங்க

இலங்கையில் -பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு

இலங்கை பாரம்பரிய தமிழர்களின் புனித பூமியாம் வடக்கு பகுதிக்கு தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட ஆளும் இரத்தக் கறை படிந்த

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட கோட்ட பாயவினால் திருமதி சாள்ஸ் ஆளுநராக நியமிக்க பட்டுள்ளார் .

இவர் முன்னர் வகித்த பதவி நிலைகளில் பலத்த ஊழல்கள் ,மோசடிகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இருந்தார்


அவ்வாறான ஒருவர் மீளவும் ஆளுநராக நியமிக்க பட்டுள்ளது ஒரு பொம்மை ஆட்சியில் அமர்த்தி அதற்கு அழகு பார்ப்பது போன்ற நியமன இதுவாகும் .

கொழும்பு சொல்லும் கட்டளைக்கு தலையாட்டி செல்லும் பெட்டி பாம்பாக அம்மணி உருவாக்கம் பெற்றுளளர் .


புரையோடி போயுள்ள தமிழர்களின் இறைமையுள்ள அரசியல் நோக்கி இவரால் நகர முடியுமா .? என்றால் பதில் நிச்சயமாக இலை என்றே வீழ்ந்து மறையும் .

சிங்கள ஆளும் பவுத்த வெறி பிடித்த இவர்களது ஆட்சியில் அற்ப பதவிகளுக்கு விலைபோயுள்ள இவர்கள் போன்றவர்கள் ,

பொம்மை ஆளுநர் வடக்கிற்கு நியமிப்பு

மக்கள் மத்தியில் காத்திரமான சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து சென்று இருந்தால் கூட போற்றுதலுக்கு உள்ளாகி இருப்பார்கள் .

ஆளுநர் செயல் பாட்டு தன்மைகளை புரியாத ஒருவர் அதனை முழுமையாக இராய தந்திர ரீதியில் தெரியாத ஒருவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளது சர்வதேச அளவில் நயப்புக்கு இடமாக மாற்றம் பெற்றுள்ளது .

தமிழர் மனங்களை இவர்களை வைத்து வென்று விடலாம் என கோட்டா ,மகிந்த கனவு காண்பது புதைகுழி வெட்டி அதற்குள் அவர்களே வீழ்ந்து உறங்குவதற்கு சமன் ஆகும்

நடப்பாண்டின் நிகழ்வுகள் எல்லாம் கோட்டா அரசு விரைவில் மொத்த இலங்கை மக்களினால் காணமல் போகும் நிலையான நிலைமையை உருவாக்கும் திசை நோக்கி பயணிக்கிறது .

இது மிக பெரும் ஆபத்தான ஒன்றானதும் ,அதனை புரிந்து கொண்டு செயல் பட ஆளும் அதிகாரம் மறந்தால் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியில் ஏற்றிய அதே

சிங்களவர்கள் இவர்களை எட்டி உதையும் நாள் இவர்கள் செயல்முறை படுத்தும் நகர்வின் ஊடாக இலங்கை வரலாற்றில் கறை படிந்த வரலாறாக எழுத பட போவதை இப்போதே அடித்து கூறலாம்

  • வன்னி மைந்தன் –

இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply