பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு : தெலங்கானாவில் அதிர்ச்சி
மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு : தெலங்கானாவில் அதிர்ச்சி சம்…
ஹைதராபாத் அருகே, கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு பெண் எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகே, சைபராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Priyanka Reddy: பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை!!
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், சம்ஷாபாத் பகுதிக்கு உட்பட்ட சித்துலகுட்டா சாலைக்கு அருகே, வனத்தை போன்ற அடந்த மரங்கள் நிறைந்த இடத்தில் மற்றொரு பெண்ணின் உடலை எரிந்த நிலையில் போலீசார் வெள்ளிக்கிழமை இரவு(நவம்பர் 29) கண்டறிந்தனர்.