புதிய யாழ் மாவட்ட பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்…!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் ரத்நாயக்க பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Author: நிருபர் வெடியன்