பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை

Spread the love

பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை

பட வாய்ப்புகுறைந்ததால் விரக்தி அடைந்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை
சுபர்னா ஜாஷ்


மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து

வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார்.

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

சுபர்னா ஜாஷ்

இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது பெற்றோர், உடனடியாக

மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா

ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி

Spread the love