திருமணமான 3ம் நாளில் சோகம்- விபத்தில் மனைவி பலி; கணவன் காயம்

Spread the love

திருமணமான 3ம் நாளில் சோகம்- விபத்தில் மனைவி பலி; கணவன் காயம்

வவுனியா, முருகனூர் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்

படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது-25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது

வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த

முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அம்யூலன்ஸ் வாகனம் மூலம் வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார். இவர்கள்

இருவருக்கும் கடந்த இரு தினங்களிற்கு முன்னரே திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமணமான 3ம் நாளில்

Spread the love