தப்பி ஓடிய காதலன்
சக்கரையா நீ இனிக்க
சமைஞ்சவளே நான் துடிக்க …
அக்கைரையை தேடுகிறேன் – அடி
ஆள் மனசில் என் உரசல் …?
நீ பதித்த கால் தடத்தை
நிலம் புரட்டி நான் எடுக்க ….
காதல் நெஞ்சில் நட்டவளே
காத்திருக்கேன் வாராயோ …?
ஈர் உடலும் ஓர் உடலாய்
இல்லமதில் தினம் கலக்க …
வந்து விடு என் கிளியே
வாசலிலே காத்திருக்கேன் …..
தவணைகளை அடுக்கி வைத்து
தண்டனையை ஏற்றி வைத்து ….
வேடிக்கை பார்ப்பதென்ன ..?- என்
வேதனையை தணிக்காயா ….?
குரல் உயர்த்தி பதில் உரைத்தால்
குனிந்து தலை அழுபவளே …..
உன் மனதில் உள்ளதென்ன …?
உயிரே பதில் கூறாயோ …?
தப்பி ஓடிய காதலன்
ஆசை வைத்து நீ தவிக்க
அதில் பாதி நான் துடிக்க ….
ஏது நான் செய்திடுவேன்
என் வீட்டின் கடைசி புள்ள ….
சீதைகளை கூட்டி வைத்து
சீதனத்தை ஏற்றி வைத்தால் …
பேதைகளோ என் செய்வார் …?
பேரின்பம் என்றடைவார் …?
ஆண்டு ஒன்று ஓடிவிட
அகவை ஒன்று கூடி விட ….
தேவதைகள் சிறைச்சாலை
தேடுபவர் உடைப்பாரோ …?
வந்தவர்கள் ஆயிரத்தில்
வண்டிகளில் தந்து விட …
முந்தி நின்று கேட்டு நிற்பின்
முதிர் கன்னி என் செய்வாள் …?
ஆசையோடு தவிப்பவரே
அவர் போல நீரூ மென்றால் …
நான் வாழும் சிறைச்சாலை
நான் உடைக்க முடியாதே ….?
பேரன்பு கொண்டவளே
பேரிடரை ஏன் தந்தாய் …?
அடியே உன்னை நான் மணக்க – இந்த
ஆயுள் ஒன்று போதாது ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -03/12/2018
வன்னி மைந்தன் கவிதைகள்