
ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.
அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான
தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விளக்கினார்.
ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
காலநிலை மாற்றத்தை திறம்படக் கையாள்வதற்குத் தேவையான நிதி திரட்டும் முக்கியமான பிரச்சினை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்
, காலநிலை தொடர்பானத் திட்டங்களுக்கு நிதி மூலங்களை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண
விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு
- எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி
- காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
- நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி
- எம் பியின் தம்பி விபத்தில் கைது
- நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
- இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது
- நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
- இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
- காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்
- ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
- ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்