க.பொ.த சாதாரண தர பரிட்சைகள் இன்று ஆரம்பம்…!

2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகியது

நாடு முழுவதிலும் நாலாயிரத்து 987 மத்திய நிலையங்களில் நடைபெறும்; இந்தப் பரீட்சையில் 717,008 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

வரலாற்றிலேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறையே ஆகக் கூடுதலான பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்

Share this:

Author: நிருபர் வெடியன்